கோவா சிக்கன் கறி


தேவையான பொருட்கள :

கோழி – ஒன்று
தேங்காய் – ஒன்று
மஞ்சள் – ஒரு அங்குலத் துண்டு
உலர்ந்த மிளகாய் – 10
மிளகு – 6  Continue reading

சிக்கன் லெக் ரோஸ்ட்


                                                               Image

தேவையான பொருட்கள் :

  • சிக்கன் லெக்ஸ் – 5
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்

Continue reading

பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு


+17

கடல் உணவுகள் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும். அதிலும் கடல் உணவுகளுக்கு பிரியர்கள் அதிகம். குறிப்பாக நண்டு பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய நண்டை எப்போது பார்த்தாலும், வறுவல் செய்து சாப்பிட்டு அழுத்துப் போயிருந்தால், பெங்காலி ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிடலாம். ஏனெனில் பெங்காலி ஸ்டைல் உணவுகள் அனைத்தும் மிகவும் ருசியுடன் இருக்கும். எனவே பெங்காலி ஸ்டைலில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட, இது ஒரு சூப்பர் டிஷ். சரி, அந்த பெங்காலி ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

  • நண்டு – 2
  • வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
  • பிரியாணி இலை – 2
  • பட்டை – 1
  • கிராம்பு – 5
  • ஏலக்காய் – 4
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் நண்டுகளை சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நண்டுகளைப் போட்டு 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி, நண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, நீரை கீழே ஊற்றிவிடாமல் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்பு அத்துடன் வேக வைத்துள்ள நண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 7-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை அதனுடன் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி நண்டு குழம்பு ரெடி!!!

மஷ்ரூம் பிரியாணி


Indian Recipe: Mushroom Biriyani - Cooking Recipe in Tamil

 

அசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. Continue reading

தேங்காய் சிக்கன் குழம்பு 


tamil samayal

தேவையானவை :

சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)
பெரிய வெங்காயம்-5 நறுக்கியது
தக்காளி-2 நறுக்கியது
உப்பு தேவையான அளவு

அரைக்க :

மிளகு-1டீஸ்பூன்
பெருஞ்சீரகம் விதைகள்-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்-5-6
காய்ந்த தேங்காய்-1/4 கப்
இஞ்சி- சிறிதளவு
பூண்டு-7

செய்முறை :

கடாயில் மல்லி விதை, மிளகு, சிவப்பு மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனிவே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து  துருவி வைத்துள்ள தேங்காயை கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்த பொருட்களுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில்  போட்டு நைஸாக அரைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.  பொன்னிறமாக வதக்கியதுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் கலந்து கிளறி விடவும்.

பின்னர் சிக்கனுடன்  சிறிதளவு உப்பு,  மிளகாய்தூள் சேர்த்து பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பத்து நிமிடங்களுக்கு கிளறிவிடவும். கிளறியதும் தக்காளி மற்றும்  தேவையான அளவு உப்பு  சேர்த்து கிளறி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை போட்டு சிக்கனை மூடி வைத்து வேகவிடவும். சிக்கன்  வெந்ததும் இறக்கி பறிமாறலாம்.

Continue reading

தக்காளி சாம்பார்


+15
தேவையான பொருட்கள்:

*வேகவைத்த துவரம்பருப்பு – 1/2கப்
*மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
*உப்பு – தேவைக்கேற்ப
*கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்
*தக்காளி – 2 அரிந்து கொள்ளவும் Continue reading