கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்

இளசான கறிவேப்பிலை – 2 கப்

மிளகு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

புளி – சுண்டைக்காய் அளவு.

உப்பு – தேவையான அளவு

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

 

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ——————————————————————

பின்னூட்டமொன்றை இடுக