சங்கரா மீன் குழம்பு

DSCN0335

தேவையான பொருட்கள்
சங்கரா மீன் – அரை கிலோ
புளி – எலுமிச்சை அளவு
வெங்காயம் – 3
தக்காளி – 3
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 மேஜைக்கரண்டி
உப்பு – ருசிக்கேற்ப சேர்க்கவும்
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து

எப்படி செய்வது?
சங்கரா மீனை செதில், குடல் பகுதிகளை நீக்கி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த மீனை மஞ்சள் தூள் தூவி வைக்கவும். புளியை ஊறவைத்து 2 தம்ளர்(பெரிய அளவு தம்ளர்) அளவுக்கு கரைத்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். காய்ந்த எண்ணெயில் வெந்தயத்தைப் போட்டு வெடிக்கவிடவும். வெங்காயத்தை இதில் போட்டு சடசடப்பு அடங்கி, லேசான பொன்னிறம் வரும்வரை வதக்கவும். இப்போது கருவேப்பிலையைப் போட்டு, வதக்கி நறுக்கி வைத்த தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி கரைந்து வதங்க, சிறிது கல் உப்பைத் தூவி வதக்கவும். இந்தக் கலவை திக்காகி வரும்போது, அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து காரல் குறையும் வரை கிளறவும். காரல் வாசம் குறைந்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். குழம்பில் குமிழ்கள் தோன்றும்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை ஒவ்வொன்றாகப் போட்டு நடுத்தரமான அனலில் 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதி வந்ததும் இறக்கி, பா¢மாறுங்கள்!

குறிப்பு: மீனை குழம்பில் போட்டவுடன் கரண்டியைப் போட்டு அடிக்கடி கிளறாமல், மெதுவாக கிளருங்கள். அகலமான வாணலியில் மீன் குழம்பு வைத்தால் மீன், குழம்பில் பரவலாக இருந்து, வெந்து வரும்.

பின்னூட்டமொன்றை இடுக