மீன் ரோஸ்ட்


தேவையானவை:
மீன் – 2 பெரிய துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
சோம்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை:

  • மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும்.
  • தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும்.
  • இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.
  • இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.
குறிப்பு:
  • மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டு தூள் தூவி இறக்கினால் இன்னும் சுவை கூடும்.
  • அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.
  • இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.

Continue reading

சுக்கா வறுவல்


thumb_01-03-2012_29samayal-550x273

தேவையான பொருட்கள்
  • மட்டன் – 350 கிராம்
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 2 அல்லது சின்ன வெங்காயம் – 30
  • தக்காளி – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
  • மசாலாதூள் – 3 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • பூண்டு(பொடியாக நறுக்கியது) – 5 பல்

Continue reading