பூண்டு ரசம்


Picture

தேவையான பொருட்கள்

  • பூண்டு – 10 பல்
  • புளி – ஒரு எலுமிச்சம்பழ்ம் அளவு
  • மஞ்சபொடி – அரைஸ்பூன்
  • ரசப்பொடி – ஒருஸ்பூன்
  • மிளகு தூள் – அரைஸ்பூன்
  • ஜீரகத்தூள் – அரைஸ்பூன்
  • கடுகு – அரைஸ்பூன்
  • ஜீரகம் – அரைஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • கறிவேப்பிலை – ஒரு ஆர்க்
  • நெய் – ஒருடேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • புளியைக்கரைத்து வடிகட்டவும்.
  • புளிக்கரைசலில் மஞ்சதூள், மிளகுதூள்,ஜீரகதூள்,ரசம்பொடி,பெருங்காயம் உப்பு
  • சேர்த்து கொதிக்க விடவும்.
  • பூண்டை நசுக்கி கொள்ளவும்,கடாயில் நெய் ஊற்றிகடுகு, ஜீரகம்,பூண்டு தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலை சேர்க்கவும்.

வெங்காய ரசம்


Picture

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் – 4
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • துவரம் பருப்பு – 1/4 கப்
  • தக்காளி – 1
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தபருப்பு – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • பூண்டு – 3
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • கொத்தமல்லி தழை – சிறிது
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணை – 1 தேக்கரண்டி

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  • புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.பின் அதில் 1 டம்லர் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயத்தை போடவும்.
  • மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு,உளுந்த பருப்பு, கருவேப்பிலை போடவும்.கடுகு வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தை போடவும்.1 நிமிடம் வதக்கிய பின் தக்காளியை போடவும்.
  • தக்காளி வதங்கிய பின்,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும்.
  • துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் கொதிக்க ஆரம்பம் ஆகும் போது இறக்கவும்.
  • கொத்தமல்லி தழையை நன்றாக சுத்தம் செய்து ரசத்தை இறக்கிய பின் தூவவும்.
  • சுவையான வெங்காய ரசம் தயார்.

இஞ்சி ரசம்


Picture

தேவையான பொருட்கள்

  • புளி – லெமென் சைஸ்
  • தக்காளி – ஒன்று
  • துவரம் பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி (வேக வைத்தது)
  • மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • வறுத்து அரைக்க:
  • நெய் – ஒரு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • மிளகு – 9
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிது
  • பூண்டு – இரண்டு பல்
  • முழு தனியா – ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி – இரண்டு அங்குல துன்டு
  • தாளிக்க:
  • எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஐந்து ஆர்க்
  • வெந்தயம் – மூன்று
  • கொத்தமல்லி தழை – சிறிது

செய்முறை

  • துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • புளியை நன்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக நறுக்கி போட்டு உப்பு அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • வறுத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெய்யில் வறுத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
  • உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
  • தக்காளி வெந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றி கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
  • கடைசியில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

எலுமிச்சை ரசம்


Lemon Rasam - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

ரசப் பொடி – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
எலுமிச்சம்பழம் – 2
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தாளிப்பதற்கு
கறிவேப்பிலை – 1 தழை
கடுகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.

* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.

* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.

* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.

* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.

மிளகு ரசம்


Seeragam_Milagu_Rasam

தேவையான பொருட்கள்

  • பூண்டு  –  3 பல்
  • சீரகம்  –  1 1 / 4   தேக்கரண்டி
  • மிளகு  – 1 / 2  தேக்கரண்டி
  • வர கொத்தமல்லி  –  1 / 2 தேக்கரண்டி
  • வர மிளகாய்  – 1
  • மஞ்சள் தூள்  –  1 /4  தேக்கரண்டி
  • தக்காளி  – 1 /2
  • உப்பு  –  தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை  – சிறிது
  • கடுகு  –  1 /2  தேக்கரண்டி
  • கருவேப்பிலை  – சிறிது
  • பெருங்காயத்தூள்   –  1 /4  தேக்கரண்டி
  • நெய்  அல்லது எண்ணெய்  – 1 தேக்கரண்டி

Continue reading

ரசப்பொடி தயார் செய்வது எப்படி


Photo Samaiyal 1228தேவையானவை:
1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த  கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன். Continue reading

தக்காளி ரசம்


தக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம்.

தேவையான பொருட்கள் :
  • தக்காளி – பெரியது -5 ,
  • தண்ணீர் – முக்கால் லிட்டர்,
  • முழு மிளகு – 2 டீஸ்பூன்,
  • சீரகம் -ஒன்றரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள் -கால்ஸ்பூன்,
  • பெருங்காயப்பொடி – கால்ஸ்பூன்.
  • பூண்டு -10 பல (தோலுடன்)
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்,
  • கடுகு -1டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்,
  • மிளகாய் வற்றல் – 3 ,
  • கருவேப்பிலை,மல்லி இலை -சிறிது ,
  • உப்பு – தேவைக்கு.
    தக்காளியை சிறியதாக நறுக்கி கைவிட்டு நொருங்க பிசைந்து வைக்கவும்.முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
  • முழு மிளகு,முழு சீரகம்,பூண்டு சேர்த்து பரபரவென்று தட்டி வைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,வற்றல் ,கருவேப்பிலை தாளித்து இடித்து வைத்த மிளகு,சீரகம்,பூண்டு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்க்கவும்,சிறிது வதக்கவும்.தக்காளி கரைசலை சேர்க்கவும்.தீயை மிதமாக வைக்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.நுரை கூடி வரும்.அடுப்பை அணைக்கவும்.