வேர்க்கடலை பொடி

தேவையான பொருட்கள்

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்

பொட்டுக்கடலை – 1 கப்

வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) – 1/2 கப்

பெருங்காயம் – 1 துண்டு

வறுத்த கசகசா – 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6 அல்லது 8

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

 

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். –

பின்னூட்டமொன்றை இடுக