கார குழம்பு


தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1
தக்காளி-1
பூண்டு-5
வெந்தயம் -1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-2 ஸ்பூன்
தனியா தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
புளி கரைசல்- 1 கப்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கருவேப்பில்லை – சிறிது
உப்பு – 1 1/2 ஸ்பூன்
செய்முறை :
  1. எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும்.
  2. வெந்தயம் பொரிந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அதில் மிளகாய் தூள் , தனியா தூள் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கி, புளி கரைசல் உற்றி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. நன்கு கொதித்ததும் எண்ணெய் தனியே மேலேவரும் பொது இறக்கி சாதத்துடன் சாப்பிடவும்.
குறிப்பு :
வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய் சேர்த்தும் இந்த குழம்பு செய்யலாம்.

Continue reading

மோர் குழம்பு


ஒரு சிலருக்கு பால்ஏடு பிடிக்காது. தயிரில் இருந்தாலும் சாப்பிடமாட்டார்கள். அதை என்ன செய்வது? இதோ ஒரு யோசனை. Continue reading

கருணைக்கிழங்கு பொரித்த குழம்பு


தேவையான பொருட்கள் –

கருணைக்கிழங்கு – 1/2 கிலோ
பெ.வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 4
வெந்தயம் – ½ டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
கறிவேற்பிலை – தேவையான அளவு.
மிளகாய்ப் பொடி – 1டீஸ்பூன்
தனியாப் பொடி – 1டீஸ்பூன்
சீரகப்பொடி  – ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபுல் ஸ்பூன் Continue reading